மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.41.50 லட்சம் மதிப்புள்ள 1.300 கிராம் தங்கத்தை திருச்சி விமான நிலைய அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்த விமான பயணிகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஹக்கீம், நாகூர், அராபத் ஆகியோர் ரூ.41.50 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 300 கிராம் தங்கத்தை பற்பசை போன்று மாற்றி மறைத்து எடுத்துவந்தது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments