Tamil Sanjikai

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிக்குச் சொந்தமான கட்டிடத்தில் இருந்து ரூபாய் 50 லட்சம் மதிப்பிலான குட்கா, புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

திக்குறிச்சி வழியாக காரில் கொண்டு செல்லப்பட்ட புகையிலைப் பொருட்கள் முதலில் போலீசிடம் சிக்கின. இருவரைக் கைது செய்து விசாரணை செய்த பொது செறுகோல் பகுதியில் உள்ள குடோனில் இருந்து அந்த புகையிலைப் பொருட்கள் எடுத்துச் செல்வதாகக் கூறியுள்ளனர். இதை அடுத்து அந்தக் குடோனில் போலீசார் சோதனை மேற்கொண்டு சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான புகையிலை, குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

அந்தக் குடோன், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சேவியர் ராஜ் என்பவருக்குச் சொந்தமானது எனக் கூறப்படுகிறது. AMC ஏஜென்சிக்கு அந்தக் குடோனை வாடகைக்கு கொடுத்ததாக சேவியர் ராஜ் தெரிவித்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

0 Comments

Write A Comment