உத்தரப் பிரதேசத்தின் கௌதம் புத் நகர் மாவட்டத்தில் அமைந்துள்ள நொய்டா பெருநகரில் கல்லூரி மாணவி ஒருவர் அங்குள்ள கட்டிடம் ஒன்றின் மூன்றாவது மாடியில் இருந்து குடித்து தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்துடன் கைப்பிடி சுவற்றின் மீது ஏறி நின்றுள்ளார்.
இதனை அங்கு சுற்றியிருந்த பலரும் பதற்றத்துடன் வேடிக்கை பார்த்துள்ளனர். இந்நிலையில் அந்த கூட்டத்தில் இருந்த இளைஞர் ஒருவர் சாதுர்யமாக யோசித்து அந்த பெண்ணிடம் பேச்சு கொடுத்த வண்ணம் நெருங்கி வந்துள்ளார்.
தன்னை காப்பாற்ற அந்த இளைஞர் முயற்சிப்பதை உணர்ந்த அந்த பெண் திடீரென மாடியில் இருந்து கீழே குதித்தார். உடனே மின்னல் வேகத்தில் பாய்ந்து அந்த பெண்ணின் கையை பிடித்து மேலே இழுக்க துவங்கினார் அந்த இளைஞர்.
பின்னர் அருகில் இருந்த மற்றவர்களும் சேர்ந்து அந்த அப்பெண்ணை மிட்டனர். இந்த சம்பவத்தை வீடியோ எடுத்த நபர் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். தற்கொலை செய்ய முயன்ற மாணவியை சாமர்த்தியமாக காப்பாற்றிய இளைஞருக்கு சமூக வலைத்தளங்கள் மூலம் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
0 Comments