Tamil Sanjikai

நைஜீரியாவில் நேற்று நடைபெறுவதாக இருந்த அதிபர் தேர்தல் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தேர்தலை நடத்த உகந்த சூழல் இல்லை என்று கூறியுள்ள அந்நாட்டு தேர்தல் ஆணையம் வருகிற 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவித்துள்ளது. வாக்குப்பதிவு தொடங்க 5 மணி நேரம் முன்பாக இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளதால் நைஜீரிய அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பாதுகாப்பு குறைபாடுகளைக் காரணம் காட்டி, கடந்த 2011 மற்றும் 2015ஆம் ஆண்டுகளிலும் இதேபோல அங்கு தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

0 Comments

Write A Comment