பள்ளிகளில் அரை ஆண்டுத் தேர்வுகள் முடிந்து விடுமுறை விடப்பட்டுள்ளதால், ஒகேனக்கல்லில் நேற்று சுற்றுலாப்பயணிகள் கூட்டம் அலைமோதியது. உள்ளூர் மற்றும் வெளியூரிலிருந்தும் தங்கள் குடும்பத்துடன், நண்பர்களுடனும் படையெடுத்து வந்த பயணிகள், அருவிகளில் குளித்து மகிழ்ததுடன், குடும்பத்துடன் பரிசல் சவாரியும் செய்து உற்சாகமாக பொழுதைக் கழித்தனர்.
வெளிமாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் வருகை தந்ததால், ஒகேனக்கல்லில் சாலை ஓரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் ஒகேனக்கல்லில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
0 Comments