Tamil Sanjikai

2019 ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அனைத்து வாகனங்களுக்கும் உயர் பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட நம்பர் பிளேட்டுகள் பொருத்துவது கட்டாயம் என மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

வாகனங்களுக்கு பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய புதிய நம்பர் பிளேட்டுகளை அறிமுகப்படுத்துவது தொடர்பான, அறிவிப்பை மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதற்காக, மோட்டார் வாகன விதிகள் 1989-ல் புதிய திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி, 2019 ஏப்ரல் 1 முதல், புதிய நம்பர் பிளேட் திட்டம் நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது. புதிய வாகனங்களுக்கு உயர் பாதுகாப்பு அம்சங்களோடு, லேசர் பதிவெண் நம்பர் பிளேட்டுகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படுகிறது. உயர் பாதுகாப்பு அம்சம் கொண்ட நம்பர் பிளேட்டானது வாகனத்திலிருந்து அகற்ற முடியாததாகவும், மறுமுறை வேறு எவரும் பயன்படுத்த முடியாத வகையில் வாகனத்துடனே பொருத்தும் வகையில் அமைக்கப்படும்.

இதை வாகன உற்பத்தியாளர்களும், டீலர்களும் அமல்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட்டுகள் மூலம் வாகனங்களை எளிதாக கண்காணிக்க முடியும் என்பதுடன், திருடப்பட்ட வாகனங்களை வெகுவிரைவில் போலீஸார் கண்டுபிடிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Comments

Write A Comment