தமது சொத்து கணக்குகளை குறைவாக காட்டி நிதி முறைகேடு செய்துள்ளதாக நிசான் நிறுவனத்தின் தலைவர் கார்லோஸ் கோஸ்ன் (Carlos Ghosn) மீது புகார் அளிக்கப்பட்டதையடுத்து ஜப்பானில் கார்லோஸ் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லெபனானிய வம்சாவளியில், பிரேசிலில் பிறந்த அவர், மிச்செலின் நிறுவனத்தில் பணியைத் தொடங்கி ஃபிரெஞ்சுக் குடிமகனானார். அதன் பின் அவர் பணியாற்றிய ரெனால்ட் நிறுவனம், 1999-ல் நிசானின் ஒரு பகுதி பங்கை வாங்கியது.
தற்போது பிரான்சிலுள்ள ரெனால்ட் நிறுவனத் தலைமைச் செயலதிகாரியாகவும், நிசான் நிறுவனத் தலைவராகவும் உள்ள கார்லோஸ், ஒரு காலத்தில் திவாலாகும் நிலையில் இருந்த நிசான் நிறுவனத்தை மீட்டெடுத்த பெருமைக்குரியவர்.
இந்த தகவல் வெளியானதையடுத்து பிரான்சில் ரெனால்ட் நிறுவனப் பங்குகள் சரிவைச் சந்தித்துள்ளன.
0 Comments