Tamil Sanjikai

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கு இடையேயான 43-வது லீக் ஆட்டம் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இதனையடுத்து பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களான பஹார் ஜமான் மற்றும் இமாம் உல்-ஹக் ஆகியோர் களமிறங்கினர். இதில் பஹார் ஜமான் 13(31) ரன்னில் கேட்ச் ஆக, அடுத்து இணைந்த இமாம் உல்-ஹக் மற்றும் பாபர் அசாம் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை சேர்த்தனர். தொடர்ந்து பொறுப்புடன் ஆடிய இருவரும் தங்களது அரைசதத்தினை பதிவு செய்து அசத்தினர். இதில் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பாபர் அசாம் 96(98) ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த முகமது ஹபீஸ், இமாம் உல்-ஹக் உடன் கைகோர்க்க அணியின் ஸ்கோர் மேலும் உயர்ந்தது. தொடக்க வீரராக களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இமாம் உல்-ஹக் சதம் அடித்து தனது அணிகள வலுவை சேர்த்தார்.

ஆனால் எதிர்பாராதவிதமாக இமாம் உல்-ஹக் 100 பந்துகளில் 100 ரன்கள் குவித்த நிலையில் ஹிட் அவுட்டானார். அவரை தொடர்ந்து முகமது ஹபீஸ் 27(25) ரன்களில் கேட்ச் ஆனார். அதற்கு பின் ஹாரிஸ் சோகைல் 6(6) ரன்னிலும், வஹாப் ரியாஸ் 2(4) ரன்னிலும், ஷதப் கான் 1(2) ரன்னிலும், சற்று அதிரடி காட்டிய இமாத் வாசிம் 43(26) ரன்களிலும், முகமது அமிர் 8(6) ரன்னிலும் என அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை இழந்து வெளியேறினர்.

இறுதியில் பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 315 ரன்களை எடுத்தது. கடைசியில் ஷகீன் அப்ரிடி ரன் எதுவும் எடுக்காமலும், காயம் காரணமாக வெளியேறி மீண்டும் களமிறங்கிய கேப்டன் சர்ப்ராஸ் அகமது 3 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். வங்காளதேச அணியின் சார்பில் அதிகபட்சமாக முஸ்டாபியூசுர் ரஹ்மான் 5 விக்கெட்டுகளும், சைபூதின் 3 விக்கெட்டுகளும், ஹசன் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

316 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் வங்காள தேச அணியின் சார்பில்,தமிம் இக்பால் மற்றும் சவுமியா சர்கார் ஆகியோர் களமிறங்கினர். அதில் சவுமியா சர்கார் 22(22) ரன்களும், தமிம் இக்பால் 8(21) ரன்களும் எடுத்து வெளியேறினார் , அடுத்து களமிறங்கிய முசிபூர் ரஹிம் 16(19) ரன்களும், ஒரளவு சிறப்பாக ஆடிய லிட்டன் தாஸ் 32(40) ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இதனிடையே தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதத்தை பதிவு செய்த ஷகிப் அல் ஹசன் 64(77) ரன்களில் வெளியேறினார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஹூசைன் 16(21) ரன்களும், முகமது சைபுதீன் (0) ரன் ஏதும் எடுக்காமலும், ஒரளவு ரன் சேர்த்த மெஹமதுல்லா 29(41) ரன்களும், மோர்டசா 15(14) ரன்களும், முஸ்டாபியூசுர் ரஹ்மான் 1(3) ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இறுதியில் மெஹதி ஹசன் 7(6) ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். ஆட்டத்தின் முடிவில் வங்காள தேச அணி 44.1 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 221 ரன்கள் மட்டுமே எடுத்தது. பாகிஸ்தான் அணியின் சார்பில் அதிகபட்சமாக ஷாகின் அப்ரிதி 6 விக்கெட்டுகளும், ஷதாப் கான் 2 விக்கெட்டுகளும், முகமது ஆமிர் மற்றும் வகாப் ரியாஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் வங்காளதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் 94 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றது.

இந்த ஆட்டத்தில் வெற்றிபெற்றாலும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அரையிறுதிக்கு முன்னேறாமல் பாகிஸ்தான் அணி வெளியேறியது. ஏற்கனவே இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

முதல் அரை இறுத்திச்சுற்று 9-ம் தேதியும், 2-வது அரையிறுத்திச்சுற்று 11-ம் தேதியும் நடைபெறுகிறது. உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி வரும் 14-ம் தேதி நடைபெறுகிறது.

0 Comments

Write A Comment