கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஐபிஎல் அணியின் புதிய உதவி பயிற்சியாளராக நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர் பிரெண்டன் மெக்கல்லம் பொறுப்பேற்கிறார். இவர் சமீபத்தில் அனைத்து வித கிரிக்கெட்டிலிருந்தும் அவர் ஓய்வை அறிவித்தார். இதனை அடுத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உதவி பயிற்சியாளராக இணைந்துள்ளார்.
இவர் 2008 ஆம் ஆண்டு ஐபில் தொடக்க போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக 158 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.
மெக்கல்லம் கேகேஆர் அணிக்காக அவர் 5 சீசன்கள் ஆடியுள்ளார், 2009-ல் அணியின் கேப்டனாகவும் செயல்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் கொல்கத்தா அணியின் உதவி பயிற்சியாளர் ஆகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments