Tamil Sanjikai

அமெரிக்காவின் வாஷிங்டனில், கடந்த 8 ஆண்டுகளாக சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்த 44 வயது பெண்மணி ஒருவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்தனர். அதன்படி அவருக்கு மேரிலேண்டு மருத்துவ மைய பல்கலைக்கழகத்தில் அறுவை சிகிச்சை நடந்தது.

இந்நிலையில் அமெரிக்க நிறுவனம் ஒன்று உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளுக்காகவே, அதிவிரைவாக நோயாளிகளிடம், உறுப்புகளை கொண்டு சேர்க்கும் வகையில் ட்ரோன் (ஆள் இல்லாத விமானம்) சேவையை தொடங்கியுள்ளது.

அந்த வகையில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இந்த ட்ரோன், முதல் முறையாக அந்த பெண்மணிக்காக சிறுநீரகத்தை சுமந்து 5 கிலோ மீட்டர் தூரம் பயணித்து சென்றுள்ளது.

கடந்த ஆண்டு நிலவரப்படி, அமெரிக்காவில் சுமார் 1 லட்சத்து 14 ஆயிரம் பேர் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக பதிவு செய்து காத்திருக்கும் நிலையில், இந்த ட்ரோன் சேவை அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

0 Comments

Write A Comment