பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகளில் பண மாேசடியில் ஈடுபட்டு, வெளிநாட்டிற்கு தப்பிச் சென்ற நிரவ் மாேடி, தற்போது பிரிட்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை ஜாமினில் வெளியே விட்டால் ஆதாரங்களை அழிக்க வாய்ப்பிருப்பதாக கூறி, பிரிட்டன் கோர்ட் அவருக்கு ஜாமின் வழங்க மறுத்துவிட்டது.
மும்பையை சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மாேடி, பஞ்சாப் நேஷனல், ஸ்டேட் பேங்க் உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகளில் 11,356.84 கோடி ரூபாய் கடன் பெற்று, அதை திரும்ப செலுத்தாமல் மீண்டும் ஓர் மாேசடியில் ஈடுபட்டு, வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றார்.
பிரிட்டனில் இருந்த போது, இந்திய அரசின் வேண்டுகோளை ஏற்று, நிரவ் மாேடியை, பிரிட்டன் போலீசார் கைது செய்து, நீதிமன்ற காவலில் வைத்துள்ளனர். அவரை நாடு கடத்துவதற்கான முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில், தனக்கு ஜாமின் வழங்கும்படி, நிரவ் மாேடி சார்பில் ஏற்கனவே இருமுறை மனு செய்யப்பட்டது. அதை அந்நாட்டு கோர்ட் நிராகரித்து விட்டது. தற்போது, பிரிட்டன் ஐகோர்ட்டில், நிரவ் மாேடி தாக்கல் செய்த ஜாமின் மனு மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய சூழலில் நிரவ் மாேடியை ஜாமினில் விட்டால், அவர் தனக்கு எதிரான ஆதாரங்களை அழிக்க வாய்ப்பிருப்பதாக நீதிபதி கருத்து தெரிவித்தார். மேலும் அவரின் ஜாமின் மனுவை நிராகரித்தார்.
0 Comments