Tamil Sanjikai

கிறிஸ்தவர்களின் தவக்காலம் இன்று சாம்பல் புதன் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு 3-ஆம் நாள் உயிர்த்தெழுந்த தினம் ஈஸ்டர் விழாவாக கொண்டாடப்படுகிறது. அதற்கு முன்னர் உள்ள 40 நாட்களை கிறிஸ்தவர்கள் தவக்காலமாகக் கடைப்பிடிக்கின்றனர்.

ஆடம்பர விழாக்கள் பங்கேற்பதை தவிர்ப்பதுடன் , உணவுக்கட்டுப்பாடு உள்ளிட்டவற்றை அவர்கள் மேற்கொள்கின்றனர். தவக்காலத்தின் தொடக்க நாளான சாம்பல் புதனை முன்னிட்டு நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலயத்தில் நடைபெற்ற சிறப்புத் திருப்பலியில் ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.

கடந்த ஆண்டு குருத்தோலை ஞாயிறு அன்று பயன்படுத்திய குருத்தோலைகளை எரித்து அந்த சாம்பல் பக்தர்கள் நெற்றியில் சிலுவை அடையாளமாக வரையப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் ஆலயத்தில் நடைபெற்ற திருப்பலியிலும் சிலுவை அடையாளம் வரையும் நிகழ்ச்சியிலும் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

0 Comments

Write A Comment