Tamil Sanjikai

20 வாரங்களுக்கு மேற்பட்ட கருவைக் கலைக்க நீதிமன்றத்தின் அனுமதி அவசியமாகும். ஆனால் தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்படுமெனில் 4 மாதங்களுக்கு மேற்பட்ட கருவை நீதிமன்ற அனுமதியின்றி மருத்துவர் கலைக்கலாம் என மும்பை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கருக்கலைப்புக்காக உயர்நீதிமன்றத்தின் அனுமதியை நாடி தொடர்ந்து பல வழக்குகள் தொடரப்பட்டு வருவதாக மும்பை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு சுட்டிக்காட்டியுள்ளது.

தாயின் உயிருக்கு உடனடி ஆபத்து ஏற்படும் என்றாலோ, அல்லது குழந்தை அசாதாரண நிலையில் பிறக்கும் என்றாலோ நீதிமன்ற அனுமதியின்றி பதிவு செய்த மருத்துவரே கருவைக் கலைக்கலாம் என மும்பை உயர்நீதிமன்ற அமர்வு தெரிவித்துள்ளது.

அதுபோன்ற சமயத்தில் கருக்கலைப்பு மேற்கொள்ளும் பதிவு செய்யப்பட்ட மருத்துவருக்கு மருத்துவக் கருக்கலைப்புச் சட்டம் பாதுகாப்பு வழங்கும் என தெரிவித்துள்ளது..

அதேசமயம், சம்பந்தப்பட்ட பெண்ணோ உறவுகளோ கருக்கலைப்புக்கு பொறுப்பேற்று அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாது என்று சுட்டிக்காட்டிய உயர்நீதிமன்றம் மகாராஷ்டிர அரசு இதுபோன்ற சம்பவங்களுக்குத் தீர்வு காண கொள்கை வகுத்து பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது..

0 Comments

Write A Comment