தமிழகத்தில் தொழில் தொடங்க அமெரிக்க நிறுவனங்கள் பல விருப்பம் தெரிவித்துள்ளன.
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் பல்வேறு தொழில் நிறுனத்தினர் அமெரிக்கா சென்றுள்ள முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது, தமிழகத்தில் தொழில் தொடங்க பலரும் விருப்பம் உள்ளதாக முதலமைச்சரிடம் தெரிவித்தனர். 10-க்கும் மேற்பட்ட அமெரிக்க நிறுவன தலைவர்கள் தொழில் தொடங்க விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன..
முன்னதாக, சான் பிரான்சிஸ்கோவில் உள்ள டெஸ்லா நிறுவனத்தில் முதலமைச்சர் பழனிசாமி, அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, எம்.சி.சம்பத், ஆர்.பி.உதயகுமார் பார்வையிட்டனர். அப்போது, டெஸ்லா காருடன் முதலமைச்சர் போஸ் கொடுக்கும் புகைப்படம் ஒன்றும் வெளியானது குறிப்பிடத்தக்கது.
0 Comments