Tamil Sanjikai

பறக்கும் மோட்டார் சைக்கிளை உருவாக்கி வருவதாக ஒரு அமெரிக்க நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஹாலிவுட், சயின்ஸ் ஃபிக் ஷன் படங்களில் புனைந்துரைக்கப்படும் பறக்கும் மோட்டார் சைக்கிள்களை நிஜ வாழ்க்கையில் சாத்தியமாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கல்ஃபோர்னியாவைச் சேர்ந்த ஜெட்பேக் ஏவியேஷன் நிறுவனம் தெரிவித்துள்ளது. விமானத் தொழில் நுட்ப அடிப்படையில் திருத்தியமைக்கப்பட்ட ஜெட் எஞ்சின்களைக் கொண்டு பறக்கும் மோட்டார் சைக்கிள்கள் தயாரிக்கப்படும் என அந்த நிறுவனம் கூறியுள்ளது.

அதிகபட்சமாக மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்திலும், 15 ஆயிரம் அடி உயரத்திலும் செல்லும் திறனுடையவையாக பறக்கும் மோட்டார் சைக்கிள்கள் இருக்கும் என்றும் அவற்றின் விலை 3 லட்சத்து 80 ஆயிரம் டாலராக இருக்கும் என்றும் தெரிவித்துள்ள அந்த நிறுவனம் அடுத்த ஆண்டில் இந்த மோட்டார் சைக்கிள்களை வாடிக்கையாளர்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாகதக் கூறியுள்ளது.

0 Comments

Write A Comment