கர்நாடகத்தில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் 4பேர் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் சேர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது . கர்நாடகத்தில் மதச்சார்பற்ற ஜனதாதளம் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களைப் பணங்கொடுத்து விலைக்கு வாங்கி ஆட்சியைக் கலைக்க பாஜக முயல்வதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.
அனைத்துச் சட்டமன்ற உறுப்பினர்களும் தங்கள் பிடியிலேயே உள்ளதாகக் கூறி வெள்ளியன்று காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ரமேஷ் ஜர்க்கிகோலி, மகேஷ் குமதல்லி, உமேஷ் ஜாதவ், நாகேந்திரா ஆகியோர் பங்கேற்கவில்லை. இவர்கள் 4பேரும் பாஜகவில் சேரவிருப்பது உறுதியாகியுள்ளது.
0 Comments