Tamil Sanjikai

சென்னையை சேர்ந்த இளம் தம்பதியர் தங்கள் இரு பெண் குழந்தைகளுடன், வியாசர்பாடி பகுதியில் சந்தோசமாகவும், நிம்மதியாகவும் வாழ்ந்து வந்தனர். இதற்கிடையே, சென்னையின் பல்வேறு பகுதிகளில் திருட்டு, கஞ்சா விற்பனை உள்ளிட்ட பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு வந்த ஆசிப் என்ற நபர், வியாசர்பாடியில் குடியேறினார்.

இரு குழந்தைகளின் தாய் மீது தன் காமப்பார்வையை வீசிய ஆசிப், அவரை காதல் வலையில் விழா வைத்தார். இதையடுத்து, தனது கணவரை விட்டு பிரிந்து சென்ற அந்த பெண், சில நாட்களில், தன் இரு பெண் குழந்தைகளுடன், ஆசிப் உடன் வாழ ஆரம்பித்தார்.

இதற்கிடையே அந்த பெண்ணின் 4 வயது மகள் யாழினிக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அந்த குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்ததால், அதன் சடலத்திற்கு இறுதி சடங்கு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த குழந்தையின் தந்தை, அதன் சடலத்தை ஏந்தி கதறி அழுதுள்ளார். அப்போது, அதன் உடலின் பல பாகங்களில் காயம் ஏற்பட்டதற்கான தழும்புகள் காணப்பட்டதால், சந்தேகம் அடைந்த அவர் தன் மனைவி மற்றும் அவரின் கள்ளக்காதலன் ஆசிப் மீது போலீசில் புகார் அளித்தார்.

வழக்கு பதிவு செய்த போலீசார் சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். பிரேத பரிசோதனையின் முடிவில், குழந்தை, சித்ரவதை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

போலீஸ் விரசரணயின் போது, ஆசிப் உண்மையை ஒப்புக்கொண்டார். தங்கள் இருவரின் காம உறவுக்கு அந்த குழந்தை இடையூறாக இருந்ததால், அதன் உடம்பில் சிகெரெட்டால் சூடு வைத்தும், உடம்பின் பல பாகங்களில் கடுமையாக தாக்கியும் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். அந்த குழந்தை பலாத்காரம் செய்யப்பட்டதும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடையடுத்து ஆசிப் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அந்த சிறுமியின் தாயும் கைது செய்யப்பட்டார்.

0 Comments

Write A Comment