இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும், முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெறுகிறது.
இரண்டு 20 ஓவர் போட்டி மற்றும் 5 ஒரு நாள் ஆட்டத்தில் விளையாடுவதற்காக ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இந்தியா வந்துள்ளது. அண்மையில், ஆஸ்திரேலிய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி புதிய வரலாறு படைத்தது இந்திய அணி, தனது சொந்த மண்ணில், வீழ்த்தி வாகை சூடும் ஆர்வத்துடன் உள்ளது. நியூசிலாந்து தொடரில் பாதியில் ஓய்வு கொடுக்கப்பட்ட கேப்டன் விராட் கோலி அணிக்கு மீண்டும் திரும்பி உள்ளார்.
இதேபோல் வேகப்பந்து வீரர் பும்ராவும், ரவீந்திர ஜடேஜாவும் களம் காண உள்ளனர். ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் ஆரோன்பிஞ்ச், மேக்ஸ்வெல், ஷான் மார்ஷ், மார்க்கஸ் ஸ்டோய்னிஸ் உள்ளிட்ட சிறந்த வீரர்கள் உள்ளனர். இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே ஆனா போட்டி இன்றிரவு 7 மணிக்குப் போட்டித் தொடங்குகிறது. இந்த போட்டியின் நேரலை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் ஒளிபரப்பாகிறது.
0 Comments