Tamil Sanjikai

அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில், ஹௌடி மோடி நிகழ்ச்சியில் பங்கேற்ற அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்திய பிரதமர் நரேந்திர மோடியை வெகுவாக பாராட்டி பேசினார். நிகழ்ச்சியில் பேசிய டிரம்ப் : "பிரதமர் மோடி தலைமையில், இந்தியா மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது.

அவர் மீது நம்பிக்கை வைத்து, 60 கோடி இந்தியர்கள் ஓட்டளித்துள்ளனர். இந்திய - அமெரிக்க உறவு முன்பை விட அதிக வலு அடைந்துள்ளது. அமெரிக்காவின் நம்பிக்கைக்குரிய நண்பனாக இந்தியா தொடந்து செயலாற்றி வருகிறது. மோடியின் அதீத செயல்பாடுகளால், இந்தியா வளர்ச்சி பாதையில் செல்கிறது.

இங்கு வசிக்கும், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். மோடியின் ஆட்சியில், 30 கோடி இந்தியர்கள் வறுமை கோட்டிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர். முன்பு எப்போதும் இல்லாத வகையில், இந்திய நிறுவனங்கள், அமெரிக்காவில் முதலீடு செய்து வருகின்றன.

இந்திய நிறுவங்களால், அமெரிக்கர்கள் பலருக்கு வேலை கிடைத்துள்ளது. எரிசக்தி துறையில் உலகின் முன்னணி நாடாக திகழும் அமெரிக்கா,இந்தியாவுடன் இணைந்து செயல்படுவதை மகிழ்ச்சியுடன் ஏற்கிறது. இஸ்லாமிய பயங்கரவாதத்தை ஒழிக்க இரு நாடுகளும் இணைந்து செயல்படும்.

சட்ட விரோதமாக வேற்று நாடுகளில் குடியேறுபவர்களை தடுக்கும் நடவடிக்கை மிக முக்கியம். எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை தடுக்கவும், பயங்கரவாதத்தை ஒழிக்கவும் இந்தியாவும், அமெரிக்காவும் என்றும் இணைந்து செயல்படும். இத்தனை காரியங்களையும், என் நண்பர் மோடியுடன் இணைந்து செயல்படுத்துவேன்" என அவர் பேசினார்.

0 Comments

Write A Comment