Tamil Sanjikai

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகளும் மோதின. இந்த போட்டியில், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முன்னதாக, இந்த போட்டியின்போது மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா 12 ரன்கள் எடுத்திருந்த நிலையில், குர்னே வீசிய பந்தில் எல்.டபிள்.யூ முறையில் ஆட்டமிழந்தார். நடுவரின் முடிவை எதிர்த்து முறையிட்டு அதில், பந்து ஸ்டம்பை தாக்குவது தெரியவந்ததால், மூன்றாவது நடுவர் அவுட் கொடுத்தார்.

அவுட் கொடுக்கப்பட்டதால், கடும் அதிருப்தி அடைந்த ரோகித் சர்மா கள நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, ஸ்டம்பை தனது பேட்டால் தட்டிவிட்டுச்சென்றார். ஒரு அணியின் கேப்டனான ரோகித்சர்மா இவ்வாறு நடந்து கொண்டது, பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.

ரோகித் சர்மாவின் இந்த செயல்பாடு குறித்து கள நடுவர் புகார் அளித்தார். இதன்பேரில் ஐபிஎல் நிர்வாகம் நடத்திய விசாரணையில், தனது தவறை ரோகித் சர்மா ஒப்புக்கொண்டார். இதையடுத்து, ரோகித் சர்மாவுக்கு போட்டி ஊதியத்தில் இருந்து 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

0 Comments

Write A Comment