இந்தியா, தங்கள் மீது ராணுவ ரீதியிலான தாக்குதல் நடத்தினால்; அதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியிருக்கிறார்.
இதுதொடர்பாக வீடியோ அறிக்கை வெளியிட்டிருக்கும் அவர், எந்த ஆதார ஆவணங்களும் இன்றி, புல்வாமா தாக்குதலுக்கு பாகிஸ்தான் தான் காரணம் என இந்தியா குற்றம்சாட்டுவதாக தெரிவித்திருக்கிறார். பாகிஸ்தான் மண்ணிலிருந்து, வன்முறை பரவுவதை ஒருபோதும் தான் விரும்புவதில்லை எனத் தெரிவித்திருக்கும் இம்ரான் கான், புல்வாமா தாக்குதலுக்கு பாகிஸ்தான் தான் காரணம் என ஆதாரம் அளித்தால், நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியிருக்கிறார்.
ஒருவேளை, பாகிஸ்தான் மீது இந்திய போர் தொடுத்தால், பதில் தாக்குதல் நடத்துவது குறித்து யோசித்துக் கொண்டிருக்காமல், உடனடியாக பதிலடி கொடுக்கப்படும் என்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்திருக்கிறார்.
0 Comments