ஐதராபாத் விமான நிலையத்தில், பயணிகளிடம் சாேதனையில் ஈடுபட்டிருந்தபோது, பெண் பயணி ஒருவரிடம் இருந்து, 11 கிலோ எடையிலான தங்க பிஸ்கட்டுகள், 1.5 கோடி ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச விமான நிலையத்தில், அங்கிருந்த அதிகாரிகள் பயணிகளிடம் வழக்கமான சாேதனையில் ஈடுபட்டு இருந்தனர் . அப்போது, சந்தேகத்திற்குள்ளான வகையில் லக்கேஜுகள் வைத்திருந்த பெண்ணின் பைகளை அதிகாரிகள் சாேதனையிட்டனர்.
அப்போது, அவர் பையில் மறைத்து வைத்திருந்த, 11 கிலோ தங்க பிஸ்கட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும் அவரிடம் விசாரணை நடத்தியதில், அவர் தங்கியிருந்த ஓட்டல் அறையில் இருந்து, 1.5 கோடி ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது, இதையடுத்து அவை பறிமுதல் செய்யப்பட்டன.
அதிகாரிகள், தொடர்ந்து அந்த பெண்ணிடம் விசாரித்து வருகின்றனர். அவர் யார், இந்த தங்கம், பணத்தை எங்கு கடத்த முயன்றார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்..
0 Comments