ஆந்திர மாநிலம் அமராவதி நகரில், கிருஷ்ணா நதிக்கரையில் ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு வசித்து வரும் வீடு உள்ளது. இந்த வீடு சட்டவிரோதமாகக் கட்டப்பட்டதாகக் கூறி அதனை காலி செய்யுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
சந்திரபாபு நாயுடு ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட பிரஜா வேதிகா கட்டடத்தை ஆந்திர மாநில அரசு, அண்மையில் இடித்துத் தள்ளிய நிலையில், சந்திரபாபு நாயுடுவின் வீட்டை காலி செய்யுமாறு ஆந்திர பிரதேச மண்டல பிராந்திய வளர்ச்சி ஆணையம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அரசு வெளியிட்டிருக்கும் தகவலின் அடிப்படையில், கிருஷ்ணா நதிக்கரையில் இருந்து 100 மீட்டருக்குள் கட்டடங்கள் கட்டுவது சட்டவிரோதம். எனவே, அவ்வாறு சுற்றுச்சூழல் விதிகளுக்கு மாறாக கட்டப்பட்டிருக்கும் 28 வீடுகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments