ஆஸ்திரேலியன் ஓப்பன் டென்னிஸ் போட்டியின் மகளிர் பிரிவில் ரஷ்யாவின் மரியா சரபோவாவைத் தோற்கடித்து ஆஸ்திரேலியாவின் ஆஸ்லே பார்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் ரஷ்யாவின் மரியா சரபோவா, ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஸ்லே பார்த்தி ஆகியோர் விளையாடினர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் செட்டை ஆறுக்கு நான்கு என்கிற கணக்கில் சரபோவா கைப்பற்றினார்.
அடுத்த இரண்டு செட்களையும் ஆறுக்கு ஒன்று, ஆறுக்கு நான்கு என்கிற கணக்கில் கைப்பற்றிய ஆஸ்லே பார்த்தி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். காலிறுதி ஆட்டத்தில் அவர் செக் குடியரசு நாட்டின் பெட்ரா கிவிட்டோவாவை எதிர்கொள்கிறார்.
0 Comments