பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில், மறுதாக்குதலில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவ வீரர்களால், பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை ஆள்வது பாகிஸ்தான் அரசு அல்ல பயங்கரவாதிகளே என்ற கருத்தை முன்வைத்துள்ளார் இந்திய ராணுவ ஜெனரல் பிபின் ராவத்.
கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ள பயங்கரவாதிகளின் தாக்குதல்களை கண்டித்து, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில், சமீபத்தில், மறுதாக்குதலில் ஈடுபட்டுள்ளனர் இந்திய ராணுவ வீரர்கள், பயங்கரவாதிகளுக்கு சொந்தமான நான்கு முகாம்களை தாக்கி அழித்ததோடு, 6 முதல் 10 பாகிஸ்தான் ராணுவ வீரர்களையும் சுட்டுக் கொன்றனர்.
இதை தொடர்ந்து, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியை பாகிஸ்தான் அரசு ஆளவில்லை, பயங்கரவாதிகள் தான் ஆளுகின்றனர் என்று கூறியுள்ளார் இந்திய ராணுவ அதிகாரி பிபின் ராவத்.
0 Comments