Tamil Sanjikai

நாடிங்ஹாமில் நடக்கும் 26வது உலக கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியா, வங்கதேச அணிகள் மோதின. இதில் ‘டாஸ்’ வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பின்ச், முதலில் ‘பேட்டிங்’ தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு வார்னர் (166), பின் (53), கவாஜா (89) ஆகியோர் கைகொடுக்க, ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து, 381 ரன்கள் எடுத்தது.

இமாலய இலக்கை எதிர்கொள்ள களமிறங்கிய வங்கதேச அணிக்கு, சவுமியா சர்கார் (10) சுமாரான துவக்கத்தையே அளித்தார். தமீம் (62) அரைசதம் அடித்து அவுட்டானார். பின் வந்த ஷாகிப் அல் ஹாசன் (41) அதிகம் நிலைக்கவில்லை.

தொடர்ந்து வந்த லிடன் தாஸ் (20) ஜாம்பா சுழலில் சிக்கி ஆட்டம் இழந்தார். பின் முஷ்பிகுருடன் இணைந்த மகமதுல்லா பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆஸ்திரேலியா பவுலர்களின் பந்துவீச்சை மிகவும் சிறப்பாக கையாண்டனர்.

இந்நிலையில் வங்கதேச அணி வெற்றி பெற 30 பந்தில் 82 ரன்கள் தேவைப்பட்டது. மகமதுல்லா 69 ரன்கள் எடுத்து கூல்டர் நைல் வேகத்தில் வெளியேறினார். அடுத்த பந்திலேயே சபீர் ரஹ்மானையும் (0) வெளியேற்றினார் கூல்டர் நைல். முஸ்பிகுர் ரஹீம் 102 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.இருந்தும் . முஸ்பிகுர் போராட்டம் வீணானது.
இதையடுத்து வங்கதேச அணி, 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 333 ரன்கள் மட்டும் எடுத்து. 48 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.

இப்போட்டியில் ரன்கள் எடுத்த வங்கதேச அணி, ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக தனது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது. முன்னதாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக கடந்த 2011ல் மிஸ்பூரில் நடந்த போட்டியில் வங்கதேச அணி 6 விக்கெட்டுக்கு 295 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது. தவிர, சர்வதேச ஒருநாள் அரங்கில் வங்கதேச அணி தனது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது.

0 Comments

Write A Comment