Tamil Sanjikai

மோடி தலைமையில் அமைய உள்ள மத்திய அமைச்சரவையில் நிதியமைச்சராக அருண் ஜெட்லி பொறுப்பு ஏற்க மாட்டார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு பின்னர் அவர், அமெரிக்காவுக்கு சென்று சிகிச்சை மேற்கொண்டார். இதனால் கடந்த பிப்ரவரி மாதம் அவருக்கு பதிலாக பியூஷ் கோயல், இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்நிலையில் இப்போது புதிதாக அமைய உள்ள மத்திய அமைச்சரவையில் அருண் ஜெட்லி நிதியமைச்சராக இடம்பெற மாட்டார் என்றும் உடல் நலக் குறைவு காரணமாக அவர் வேறு இலாகா அமைச்சராக பொறுப்பு ஏற்பார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

வியாழன் அன்று டெல்லியில் நடைபெற்ற வெற்றிக் கொண்டாட்டத்தில் கூட அருண் ஜெட்லி பங்கேற்காததற்கு அவரது உடல் நலக் குறைவே காரணமென கூறப்படுகிறது. இந்நிலையில் மத்திய நிதியமைச்சராக பியூஷ் கோயலும், உள்துறை அமைச்சராக அமித்ஷாவும் பதவி ஏற்பார்கள் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.பாஜ.க வட்டாரங்களை மேற்கோள் காட்டி இந்த தகவலை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

0 Comments

Write A Comment