Tamil Sanjikai

உலகில் 2-வது முறையாக ஈராக்கில் பெண் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் 7 குழந்தைகள் பிறந்த சம்பவம் பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

கிழக்கு ஈராக்கின் தியாலி மாகாணத்தில் அமைந்துள்ள மருத்துவமனை ஒன்றில் சமீபத்தில் பிரசவத்திற்காக பெண் ஒருவர் அனுமதிக்கப்பட்டார். அனுமதிக்கப்பட்ட பெண்ணின் வயது 25. அந்த பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 6 ஆண் மற்றும் 1 பெண் குழந்தை என 7 குழந்தைகள் பிறந்துள்ளன. அனைத்து குழந்தைகளும் நலமாக உள்ளன.

பிரசவமான பெண்ணுக்கு ஏற்கனவே 3 குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து குழந்தைகளின் தந்தை கூறுகையில் "தற்போது எங்களுக்கு மொத்தம் 10 குழந்தைகள் இருக்கின்றனர். இவர்கள் அனைவரையும் ஒரே சமயத்தில் நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டும். இதனால் இனியும் குழந்தை பெறும் எண்ணம் இல்லை என்று தெரிவித்துள்ளார்".

ஒரே பிரசவத்தில் 7 குழந்தைகள் என்பது உலகில் இது இரண்டாவது முறையாகும். உலகில் 1997-ஆம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் 7 குழந்தைகள் பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

0 Comments

Write A Comment