Tamil Sanjikai

ஹாலிவுட் நடிகையான பெலிசிட்டி ஹப்மன் ((felicity huffman)), கல்லூரி நுழைவுத் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டதை ஒப்புக் கொண்டார்.

“டெஸ்பெரேட் ஹவுஸ்வைவ்ஸ்” என்ற தொலைக்காட்சி தொடர் மூலம் பிரபலமான நடிகையான அவர், தனது மூத்த மகளுக்கு நல்ல கல்லூரியில் இடம் கிடைக்க வேண்டும் என்பதற்காக லஞ்சம் கொடுத்ததாகக் குற்றம்சாட்டப்பட்டது.

SAT நுழைவுத் தேர்வில் அவரது மகள் அதிக மதிப்பெண் பெற 10 லட்சம் ரூபாய் லஞ்சமாக கொடுத்ததாக வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கில் ஹப்மேன் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார்.

தனது செயலுக்கு பெலிசிட்டி ஹப்மன் வருத்தம் தெரிவித்துள்ளார். இவரைத் தவிர இன்னும் 12க்கும் அதிகமான பெற்றோரும் இதே குற்றத்தைச் செய்ததாக ஒப்புக் கொண்டுள்ளனர்.

அவர்களுக்கு 4 முதல் 10 மாதங்கள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

0 Comments

Write A Comment