Tamil Sanjikai

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்ற எலெக்ட்ரானிக்ஸ் கண்காட்சியில், நடந்து செல்லும் கார் குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

தென்கொரியாவைச் சேர்ந்த ஹூண்டாய் நிறுவனம், வடிவமைத்து வரும் இந்த கார், சுனாமி, நிலநடுக்கம் போன்ற இயற்கை பேரிடர்களின் போது, பாதிக்கப்பட்டவர்களை மீட்க உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டு வருகிறது. மலை உச்சியிலும், கட்டட இடிபாடுகளில் நடந்து செல்லும் இந்த கார், மீட்பு பணிக்கு பின்னர், வழக்கம் போல மற்ற கார்களை போல் சாலைகளில் ஓடும் திறன் கொண்டது.

எதிர்காலத்தில் இதுபோன்ற கார்கள் அதிகளவில் பயன்பாட்டுக்கு வரும் எனவும். இந்த காரை வடிவமைப்பது தொடர்பான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், ஹூண்டாய் நிறுவனம் தெரிவித்துள்ளது.

0 Comments

Write A Comment