Tamil Sanjikai

இந்தியாவில் அதிகமான இளைஞர்களால் எதிர்பார்க்கப்பட்ட கே.டி.எம். டியூக் 200 ஏ.பி.எஸ். வேரியன்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஏ.பி.எஸ். வெர்ஷனின் விலை 1.6 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கே.டி.எம். டியூக் 200 பைக் இந்தியாவில் கே.டி.எம். நிறுவனத்துக்கு அதிகம் விற்பனையாகும் மாடலாக இருக்கிறது. இதுவரை கே.டி.எம். டியூக் 200 மாடலில் ஏ.பி.எஸ். வசதி வழங்கப்படாமல் இருந்தது. ஏப்ரல் 2019 முதல் இந்தியாவில் அமலாக இருக்கும் பாதுகாப்பு விதிமுறைகளின் படி கே.டி.எம். நிறுவனம் தனது டியூக் 200 மாடலில் ஏ.பி.எஸ். வசதியை சேர்த்துள்ளது.

டியூக் 200 மாடல் அந்நிறுவனத்தின் விலை குறைந்த மாடலாகவும் இருக்கிறது. இந்தியாவில் கே.டி.எம். டியூக் 200 மாடல் 2013-ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. கே.டி.எம். டியூக் 200 மாடலில் வழங்கப்பட்டுள்ள டூயல்-சேனல் ஏ.பி.எஸ். போஷ் நிறுவனம் உருவாக்கியது. இதே டூயல்-சேனல் ஏ.பி.எஸ். வசதி 2017 மாடலான டியூக் 390 மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. டியூக் 200 மாடலில் 199.5சிசி லிக்விட்-கூல்டு சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 24 பி.ஹெச்.பி. பவர், 19.6 என்.எம். டார்கியூ செயல்திறன், 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.

நேக்கட் பைக்கில் டிரெலிஸ் ஃபிரேம் சேசிஸ், முன்பக்கம் யு.எஸ்.டி. ஃபோர்க்கள், பின்புறம் மோனோஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டுள்ளது. டியூக் 200 மாடலில் 17-இன்ச் வீல்கள், முன்பக்கம் 300 எம்.எம். பின்புறம் 230 எம்.எம். டிஸ்க் வழங்கப்பட்டுள்ளது. கே.டி.எம். டியூக் 200 மாடல் முன்னதாக ஆரஞ்சு நிறத்தில் மட்டும் வழங்கப்பட்டு இருந்த நிலையில், தற்சமயம் வெள்ளை மற்றும் கருப்பு நிற ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது.

0 Comments

Write A Comment