பாம்பன் இரயில் பாலத்தில், வழக்கம் போல் ஆய்வு பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே பணியாளர்கள் பாலத்தின் மத்திய பகுதியை இணைக்கும் இணைப்பு கம்பிகளில் விரிசல் ஏற்பட்டிருப்பதை கண்டுபிடிக்தனர்
அதைத்தொடர்ந்து ரயில்வே ஊழியர்கள் விரிசல் ஏற்பட்ட இணைப்பு கம்பியை சரிபார்க்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
பாலத்தில் ஏற்பட்டிருக்கும் விரிசலின் காரணமாக ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை வரக்கூடிய மாலை 5 மணி ரயிலும், இரவு 8 மணி ரயிலும், அதே போல் மதுரை செல்லக்கூடிய 6 மணி ரயிலும் தாமதமாக செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இராமநாதபுரம் மார்க்கமாக ராமேஸ்வரம் வரும் ரயில் வண்டிகள் மண்டபத்தில் நிறுத்தி வைக்கப்படும் எனவும், மதுரை - ராமேஸ்வரம் பயணிகள் ரயில், திருச்சிராப்பள்ளி- ராமேஸ்வரம் பயணிகள் ரயில் உள்ளிட்ட ரயில்கள் மண்டபத்திலிருந்து இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. பாம்பன் பாலத்தில் ஏற்பட்ட விரிசல் இன்று காலை தற்காலிகமாக சரி செய்யப்பட்டது.
0 Comments