துபாய் மன்னர் ஷேக் முகமது பின் ரஷித்துக்கும், அவரின் 6-வது மனைவியான ஹயா பின்ட் அல் ஹூசைனுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த மே மாதம் ஹயா தலைமறைவானார். இவர் ஜோர்டான் நாடு முன்னாள் மன்னரின் மகளும் தற்போதய மன்னரின் தங்கையும் ஆவார்.
ஹயா லண்டன் நீதிமன்றத்தில், தனக்கு கட்டாய திருமணம் நடத்தப்பட்டதாகக் கூறியும், தனக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என கேட்டும் வழக்குத் தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு தொடர்பான பகுதியளவு செய்திகளை வெளியிட ஊடகங்களுக்கு நீதிபதி அனுமதியளித்தார்.
அப்போது தனது குழந்தைகளை துபாய்க்கே திருப்பி அனுப்புமாறு ஷேக் முகமது சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிமன்றம் வழக்கை மறுதேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தது.
0 Comments