முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப்புக்கு ஏழு வருட சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவு. மூன்று முறை பிரதம மந்திரியாக இருந்த நவாஸ் செரீப்பால் சவுதி அரேபியாவில் அவருக்கு சொந்தமாக இயங்கி வரும் உருக்கு ஆலையை வாங்கியதற்கான வருமான ஆதாரத்தை நீதிமன்றத்தில் நிரூபிக்க முடியவில்லை. இதை தொடர்ந்து பாகிஸ்தானில் இயங்கி வரும் ஊழல் எதிர்ப்பு நீதிமன்றம் நவாஸ் ஷெரீபிற்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவு பிறப்பித்தது.
இதே நீதிமன்றம் தான் கடந்த ஜூலை மாதம் செரீப் லண்டணில் சொகுசு அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்கிய குற்றச்சாட்டுக்காக அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது. பனாமா பேப்பர்ஸ் வழக்கில் நவாஸ் செரீப்பை பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் கடந்த 2017 ஆம் ஆண்டு தகுதி நீக்கம் செய்த்து குறிப்பிட்த்தக்கது.
0 Comments