Tamil Sanjikai

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் 14-வது நாளான நேற்று டவுன்டானில் நடைபெற்ற 17-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலிய அணி, முன்னாள் சாம்பியனான பாகிஸ்தானை எதிர்கொண்டது.

இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்து விளையாடியது. பாகிஸ்தான் அணியால் 22 ஓவர்கள் வரையில் விக்கெட் எதுவும் எடுக்க முடியவில்லை. இருப்பினும் ஆஸ்திரேலியா ரன் குவிப்பதை தடுக்க முயற்சி செய்தது. 22.1 வது ஓவரில் ஆரோன் பிஞ்ச் 82 ரன்களில் அவுட் ஆனார். டேவிட் வார்னர் 107 ரன்கள் அடித்து 28.4 வது ஓவரில் அவுட் ஆனார்.

அடுத்ததாக களமிறங்கிய ஸ்மித் 10 ரன்களும், மேக்ஸ்வெல் 20 ரன்களும், ஷான் மார்ஷ் 23 ரன்களும், கவாஜா 18 ரன்களும், அலெக்ஸ் ஹேரி 20 ரன்களும், கவுல்டர் நைல் 2 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். முடிவில் ஆஸ்திரேலிய அணி 49 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 307 ரன்கள் எடுத்தது.

பாகிஸ்தான் அணியின் சார்பில் அதிகபட்சமாக முகமது அமீர் 5 விக்கெட்டுகளையும், ஷகின் அப்ரிதி 2 விக்கெட்டுகளையும், ஹசன் அலி, வகாப் ரியாஸ், ஹபிஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் பாகிஸ்தான் அணிக்கு 308 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது.

308 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் காலம் இறங்கிய பாகிஸ்தான் அணியின் சார்பில் இமாம்-உல்-ஹக், பக்தர் சமான் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். அதில் பக்தர் ரன் எடுக்காமல் வெளியேற அவரைத் தொடர்ந்து களமிறங்கிய பாபர் அசாம் 30(28) ரன்களும், அரைசதம் பதிவுசெய்த இமாம்-உல்-ஹக் 53(75) ரன்களும், முகமது ஹபீஸ் 46(49) ரன்களும், ஷாகிப் மாலிக் ரன் ஏதும் எடுக்காமலும், ஆசிப் அலி 5(8) ரன்களும், அதிரடி காட்டிய ஹசன் அலி 32(15) ரன்களும் எடுத்து சீரான இடைவெளியில் வெளியேறினர்.

அடுத்ததாக கேப்டன் சர்ப்ராஸ் அஹமதுவுடன், வகாப் ரியாஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியின் அதிரடி ஆட்டத்தால் பாகிஸ்தான் அணி சரிவில் இருந்து மீண்டது. அப்போது வகாப் ரியாஸ் 45(39) ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய முகமது ஆமிர் ரன் ஏதும் எடுக்காமலும், பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேப்டன் சர்ப்ராஸ் அஹமது 40(48) ரன்களும் எடுத்து வெளியேறினர்.

முடிவில் பாகிஸ்தான் அணி 45.4 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 266 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆஸ்திரேலியா அணியின் சார்பில் அதிகபட்சமாக கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளும், ரிச்சர்ட்சன், ஸ்டார்க் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், குல்டர் நிலே, ஆரோன் பிஞ்ச் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 41 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்றது.

0 Comments

Write A Comment