Tamil Sanjikai

அன்னிய செலாவணி மோசடி வழக்கில் காணொளி காட்சி மூலம் பதிலளிக்க சசிகலாவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது..

இதுகுறித்த வழக்கு விசாரணை சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில், குற்றம் சாட்டப் பட்டவர்களிடம் கேள்விகளை கேட்டு பதிலை பதிவு செய்ய, பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை வருகிற 13 ஆம் தேதி ஆஜர்படுத்த எழும்பூர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவை ரத்து செய்து, காணொளி காட்சி மூலம் நீதிபதியின் கேள்விகளுக்கு பதிலளிக்க அனுமதி கோரி சசிகலா தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இதனை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் காணொளி காட்சி மூலம் ஆஜராகவும், பதில்கள் அடங்கிய கோப்பை, பெங்களூரு சிறைக்கு அனுப்பி, சசிகலாவின் கையெழுத்தை பெறவும் உத்தரவிட்டார்.

0 Comments

Write A Comment