Tamil Sanjikai

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து-ஆஸ்திரேலியா இடையிலான ஆட்டம் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

முதலில் பேட் செய்ய களமிறங்கிய ஆஸ்திரேலியா அணியின் ஆரோன் பிஞ்ச், டேவிட் வார்னர் ஆகியோர் . இருவரும் தொடக்க முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சிறந்த துவக்கம் தந்த இந்த ஜோடியில் வார்னர் 52 பந்தில் தனது அரைசதத்தை பதிவு செய்தார். அவரைத்தொடர்து கேப்டன் ஆரோன் பிஞ்ச் 61 பந்தில் தனது அரைசதத்தை பதிவு செய்தார். அந்த ஜோடியில் டேவிட் வார்னர் 53(61) ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து பிஞ்ச் உடன் கவாஜா ஜோடி சேர்ந்தார். கவாஜா 23(29) ரன்னில் ஆட்டமிழந்த போதிலும், பிஞ்ச் சிறப்பாக விளையாடி 115 பந்தில் தனது சதத்தை பதிவு செய்தநிலையில் 100(116) ரன்களில் கேட்ச் ஆனார். அடுத்ததாக களமிறங்கிய மேக்ஸ்வெல் 12(8) ரன்னிலும், ஸ்டாய்னிஸ் 8(15) ரன்னிலும், ஒரளவு ரன் சேர்த்த ஸ்மித் 38(34) ரன்களும், கம்மின்ஸ் 1(4) ரன்னிலும் வெளியேறினர்.

இறுதியில் அதிரடி காட்டிய அலெக்ஸ் கேரி 38(27) ரன்களும், ஸ்டார்க் 4(5) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் ஆஸ்திரேலியா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 285 ரன்கள் எடுத்திருந்தது. இங்கிலாந்து அணி சார்பில் அதிகபட்சமாக கிறிஸ் வோக்ஸ் 2 விக்கெட்டும், ஆர்சர், மார்க் வுட், பென் ஸ்டோக்ஸ், மொயீன் அலி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

286 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணியின் சார்பில் ஜேம்ஸ் வின்ஸ் மற்றும் பேர்ஸ்டோ ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். அதில் ஜேம்ஸ் வின்ஸ் (0) ரன் ஏதும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார் , ஜோரூட் 8(9) ரன்னும், கேப்டன் இயான் மோர்கன் 4(7) ரன்னும் எடுத்திருந்த நிலையில் ஜானி பரிஸ்டோவ் , ஒரளவு ரன் சேர்த்த 27(39) ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து ஜோடி சேர்ந்த பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜோஸ் பட்லர் ஜோடி அணியின் ரன் ரேட்டை சீராக உயர்த்தினர். ஸ்கோர் ஒரளவு உயர்ந்த நிலையில் ஜோல் பட்லர் 25(27) ரன்களும், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பென் ஸ்டோக்ஸ் 89(115) ரன்களும், அடுத்து களமிறங்கிய மொயின் அலி 6(9) ரன்னும், கிறிஸ் வோக்ஸ் 26(34) ரன்களும், ஜோப்ரா ஆர்ச்சர் 1(4) ரன்னும், அடில் ரஷித் 25(20) ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இறுதியில் மார்க் வுட் 1 ரன்னுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். முடிவில் இங்கிலாந்து அணி 44.4 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 221 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆஸ்திரேலியா அணியின் சார்பில் சிறப்பாக பந்து வீசிய ஜேசன் பெஹ்ரன்ட்ரோப் 5 விக்கெட்டுகளும், ஸ்டார்க் 4 விக்கெட்டுகளும், ஸ்டோய்னிஸ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 64 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்றது.

0 Comments

Write A Comment