புகழ்பெற்ற பாலிவுட் நடிகர் மற்றும் எழுத்தாளர் காதர் கான் உடல்நில குறைவால் தனது 81 வயதில் காலமானார். அமிதாப் பச்சன், ராஜேஷ் கன்னா, அனில் கபூர் உள்ளிட்ட பிரபல நட்சத்திரங்களுடன் 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் நகைச்சுவை நடிகர் காதர் கான்.
இவர் 250க்கும் மேற்பட்ட படங்களுக்கு வசன கர்த்தாவாகவும் பணியாற்றியுள்ளார். 81 வயதான அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு கனடாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் சுமார் 16 வாரங்களாக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
என் தந்நை எங்களை விட்டு பிரிந்து விட்டார். கனடாவின் நேரத்தின்படி டிசம்பர் 31 ஆம் தேதி மாலை 6 மணி அளவில் அவரது உயிர் பிரிந்தது. சுமார் 16-17 வாரங்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நாங்கள் நன்றிகடன் பட்டிருக்கிறோம்' என அவரது மகன் சராஃவாஸ் தெரிவித்தார்
காதரகானின் இறுதிச் சடங்குகள் கனடாவிலேயே நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.
0 Comments