இந்தோனேசியாவில் இன்று காலை ஏற்பட்ட தொடர் நிலநடுக்கத்தில் 20 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தோனேசியாவில் இன்று காலை 5 15 மணி அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.5 என பதிவாகியுள்ளது. இதன் பின்னர் தொடர்ச்சியாக மீண்டும் இரண்டு முறை பல பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியில் காலை 6.45 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.8 என பதிவாகி உள்ளது. இது மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கமாக உணரப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
இந்த நிலநடுக்கத்தால் பல்வேறு கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்படுகின்றனர்.
இந்த தொடர் நிலநடுக்கத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments