ஆந்திரா மாநிலம் கர்ணூலை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர் உய்யாலவாட நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி 'சைரா நரசிம்ம ரெட்டி' என்கிற திரைப்படம் தயாராகி வருகிறது. இதில் சுதந்திர போராட்ட வீரர் உய்யாலவாட நரசிம்ம ரெட்டியின் கதாப்பாத்திரத்தில் மெகாஸ்டார் சிரஞ்சீவி நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நயன்தாராவும், இவர்களுடன் அமிதாப் பச்சன், விஜய் சேதுபதி, தமன்னா ஆகியோர் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைதுள்ளார் .
தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடா, மலையாளம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் உருவாகும் இப்படத்தை மிகப் பிரமாண்டமாக சிரஞ்சிவியின் மகனும் நடிகருமான ராம் சரண் தயாரித்துள்ளார். வரும் அக்டோபர் 2ம் தேதி திரைக்கு வரவுள்ள இதன் ட்ரைலர் வரும் 18 ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் இந்த படத்தை தமிழகத்தில் வெளியிடும் உரிமையை சூப்பர் குட் பிலிம்ஸ் பெற்றுள்ளனர்.
0 Comments