Tamil Sanjikai

சமையல் கியாஸ் சிலிண்டரின் விலை, மாதந்தோறும் 1-ந் தேதி மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், வீடுகளுக்கு வினியோகிக்கப்படும் 14 கிலோ எடையுள்ள சமையல் கியாஸ் விலை, 16 ரூபாய் உயர்ந்துள்ளது. கடந்த மாதம் ரூ.590.50 ஆக இருந்த கியாஸ் சிலிண்டரின் விலை, ரூ.606.50 ஆக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு நேற்று முன்தினம் முதல் அமலுக்கு வந்தது.

இதுபோல், வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடையுள்ள சமையல் கியாஸ் விலை ரூ.1,123-ல் இருந்து ரூ.1,174 ஆக உயர்ந்துள்ளது.

0 Comments

Write A Comment