சீனாவில் பிரபலமாக விளங்கும் Xiomi நிறுவனம், இந்தியாவில் அதன் வணிகத்தை விரிவுபடுத்த 3,500 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது.
ஸ்மார்ட் போன் வணிகம் மூலம் இந்தியாவில் நுழைந்த சீனாவின் Xiomi நிறுவனம், MI என்ற பிராண்டு மொபைல்களை சந்தைப்படுத்தியுள்ளது. Xiomi நிறுவனத்தின் பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. அறிமுகமான 4 ஆண்டுகளிலேயே முன்னணி கொரிய நிறுவனமான சாம்சங்கை பின்னுக்குத்தள்ளி ஆச்சரியப்படுத்தியது.
இதன் விளைவாக இந்திய சந்தையை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் காய்நகர்த்தி வருகிறது Xiomi.
2018ம் ஆண்டின் 4வது காலாண்டில் இந்திய சந்தையில் 27% பங்களிப்பை Xiomi பெற்றிருந்த நிலையில், சாம்சங் நிறுவனத்தால் 22% பங்களிப்பையே பெற முடிந்ததாக ஆராய்ச்சி ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
இந்திய சந்தையில் அந்நிறுவனத்திற்கு கிடைத்த அபரிமிதமான ஆதரவை லாபமாக மாற்றும் நோக்கில் 3,500 கோடி ரூபாயை இந்தியாவில் முதலீடு செய்ய அந்நிறுவனம் முடிவெடுத்துள்ளது.
மொபைல் போன்கள் மட்டுமில்லாமல் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள், வாஷிங் இயந்திரங்கள், லேப்டாப்கள் மற்றும் குளிர்சாதன பெட்டிகள் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்களையும் இந்த தொகையில் உற்பத்தி செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.
0 Comments