Tamil Sanjikai

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட சார்மினார் எக்ஸ்பிரஸ் ரயிலில் தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த பாரதம்மா என்பவர் பயணித்துள்ளார். அப்போது ரயிலில் உள்ள வெஸ்டர்ன் டாய்லெட்டை அவர் தவறாக பயன்படுத்தவே, அவரது வலது கால் கழிவறை தொட்டிக்குள் சிக்கிக்கொண்டது.

வலி தாங்க முடியாமல் அவர் கதறி அழ ஆரம்பித்தார் , சத்தம் கேட்டு வந்த ரயில்வே ஊழியர்கள் அவரது காலை விடுவிக்க பல முயற்சி மேற்கொண்டனர். ஆனால் அவர்களால் முடியாமல் போகவே, தகவல் ரயில்வே போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது, தகவல் அறிந்து வந்த ரயில்வே போலீசார் கழிவறை தொட்டியை வெட்டி அகற்றி, பாரதம்மாவின் காலை விடுவித்தனர். அப்போது நடத்தப்பட்ட விசாரணையில் பயணச்சீட்டு இல்லாமல் அவர் பயணம் செய்தது தெரிய வந்தது. அவருக்கு முதலுதவி அளித்த ரயில்வே போலீஸார், பயணச்சீட்டு இல்லாமல் பயணிக்கக்கூடாது என அறிவுரை கூறி அவரை அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவத்தால் சார்மினார் எக்ஸ்பிரஸ் 30 நிமிடம் தாமதமாக புறப்பட்டு சென்றது

0 Comments

Write A Comment