Tamil Sanjikai

சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய வளாகத்திலுள்ள ஆட்டோ மற்றும் டாக்சி ஸ்டாண்டு இடத்தை ஒப்படைக்கக் கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்ட்ரல் ரயில் நிலைய வளாகத்தில் 40 ஆண்டுகளாக ப்ரீபெய்ட் ஆட்டோ மற்றும் டாக்ஸி ஸ்டாண்ட் செயல்பட்டு வந்தது. தற்போது மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறும் நிலையில் அந்த ஸ்டாண்ட் சுமார் 50 வாகனங்கள் மட்டும் வந்து செல்லும் வகையில் குறுகிய இடத்தில் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் சென்ட்ரல் ரயில் நிலையத்தை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையுடன் சுரங்கப்பாதை மூலம் இணைக்கும் பணிகள் நடைபெறவிருப்பதால் தற்போது ஸ்டாண்ட் அமைந்திருக்கும் இடத்தையம் ஒப்படைக்க சென்ட்ரல் ரயில் நிலைய நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுநர்கள் எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை தர்ணா போராட்டத்தை தொடங்கினர்.

இதையடுத்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய காவல்துறையினர் அவர்களுக்கு மாற்று இடம் ஒதுக்கித் தர நடவடிக்கை எடுக்க உறுதி அளித்ததையடுத்து அவர்கள் தற்காலிகமாக போராட்டத்தை விலக்கிக்கொண்டனர்.

0 Comments

Write A Comment