ஜனநாயக கட்சியினரின் ஆதரவை பெறுவதற்காக துளசி கப்பார்ட் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். மேலும் இந்த பிரசாரத்தின் மூலம் அவர் நிதியம் திரட்டி வருகிறார். இந்தநிலையில் துளசி கப்பார்ட்டின் பிரசாரம் குறித்த தகவல்களை விளம்பரப்படுத்துவதற்காக அவரது பிரசார குழு கூகுளில் விளம்பர கணக்கு ஒன்றை தொடங்கி நிர்வகித்து வந்தது.
இந்த விளம்பர கணக்கை கடந்த மாதம் 27, 28 ஆகிய தேதிகளில் 6 மணி நேரத்துக்கும் மேலாக கூகுள் நிறுவனம் முடக்கியதாக கூறப்படுகிறது. தகுந்த காரணம் இன்றியும், எவ்வித முன்னறிவிப்பு இன்றியும் விளம்பர கணக்கு முடக்கப்பட்டதாக துளசி கப்பார்ட் குற்றம் சாட்டினார்.
இந்தநிலையில் இந்த விவகாரம் தொடர்பாக 50 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.344 கோடியே 61 லட்சத்து 75 ஆயிரம்) இழப்பீடு கேட்டு கூகுள் நிறுவனத்தின் மீது துளசி கப்பார்ட் வழக்கு தொடர்ந்துள்ளார்.
0 Comments