டெல்லியில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் பாலத்தில் இருந்து குதித்து, தாயையும் குழந்தையையும் காப்பாற்றிவிட்டு தனது உயிரை தியாகம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் (30 வயது) ஒருவர், சவாரி முடித்து மீதாப்பூர் பாலம் வழியாக வீடு திரும்பியுள்ளார். அப்போது, பாலத்தில் தொங்கியபடி தாய் மற்றும் குழந்தை உயிருக்கு போராடியதை பார்த்து, அவர்களுக்கு உதவ அருகில் விரைந்துள்ளார். எனினும் கை நழுவி, அந்த பெண் மற்றும் குழந்தை ஆற்றிற்குள் விழுந்துள்ளனர். இதனை அடுத்து, உடனடியாக ஆற்றிற்குள் குதித்து அவர்களை காப்பாற்றியுள்ளார்.
உதவிக்கு அருகில் இருந்தவர்களை அழைத்து, அவர்களிடம் அந்த பெண் மற்றும் குழந்தையை ஒப்படைத்துள்ளார். ஆனால், ஆற்றில் தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததால் தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார் ஆட்டோ ஓட்டுநர். சம்பவம் அறிந்து அங்கு வந்த போலீசார், அந்த பெண்ணையும் குழந்தையையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
மேலும், உயிரிழந்த ஆட்டோ ஓட்டுநரின் உடலை தேடிவருகின்றனர். தான் நன்றாக இருந்தால் மட்டும் போதும் என சுயநலமாக இருப்பவர்களுக்கு மத்தியில், தன் உயிரை பெரிதாக எண்ணாமல் இரு உயிர்களை காப்பாற்றி உயிரிழந்த ஆட்டோ ஓட்டுநரின் தன்னலமற்ற இந்த செயல் பலரிடையே ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
0 Comments