Tamil Sanjikai

காற்று வெளியிடை, செக்கச் சிவந்த வானம், உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பு நிறுவனம் விக்ரம் பிரபுவின் 'வானம் கொட்டட்டும்' படத்தை தயாரிக்க உள்ளது. இந்த படத்தை மணிரத்னத்தின் உதவியாளரும், படை வீரன் படத்தின் இயக்குனருமான தினா இயக்கவுள்ளார்.

ஜீ வி பிரகாஷ், விக்ரம் பிரபு, மடோனா செபாஸ்டின், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிக்க உள்ளனர். இந்த படத்தில் மடோனா செபாஸ்டின் விக்ரம் பிரபுவிற்கு ஜோடியாகவும், ஐஸ்வர்யா ராஜேஷ் தங்கையாக நடிக உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன மேலும் கோவிந்த் வசந்த் இசைய‌மைக்க, பிரீத்தி ஒளிப்பதிவு செய்யும் 'வானம் கொட்டட்டும்' திரைப்படம் வருகிற ஜூலையில் படப்பிடிப்பை துவங்கவுள்ளது.

இந்த படத்தில் பாடகர் சித் ஸ்ரீராம் இசையமைக்க உள்ளார் என கூறப்படுகிறது. இவர் மணிரத்னம் இயக்கிய "கடல்" படத்தில் பாடகராக அறிமுகமானவர்.

0 Comments

Write A Comment