Tamil Sanjikai

முரசொலி நிர்வாகத்தின் இயக்குனராக பதவி வகித்து வந்த உதயநிதி ஸ்டாலின், திமுகவின் இளைஞரணிச் செயலாளராக நேற்று முன்தினம் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், தமிழகம் முழுவதும் விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும், நாளை நடைபெறவுள்ள திமுக இளைஞரணி கூட்டத்திற்கு பின் சுற்றுப்பயணம் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். நடைபெற்று மக்களவைத் தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் தீவிர பரப்புரை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

0 Comments

Write A Comment