Tamil Sanjikai

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் நாஷீரா பகுதியில் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலில் இந்திய ராணுவத்தின் ஜூனியர் கமிஷனட் அதிகாரி ஒருவர் உயிரிழந்தார்.

இதையடுத்து, இப்பகுதி இராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டு, பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது. முன்னதாக, அவந்திப்போரா பகுதியில் 3 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும், பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த இடத்தில் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

0 Comments

Write A Comment