Tamil Sanjikai

அரபிக்கடலில் உருவாகியிருக்கும் கியார் புயலால் கோவாவில் எந்த பெரிய பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அரபிக்கடலில் புதிதாக உருவாகியிருக்கும் புயலுக்கு கியார் என பெயரிடப்பட்டுள்ளது. இது தற்போது, கோவாவிலிருந்து 650 கிலோ மீட்டர் தொலைவில் கடலில் மையம் கொண்டுள்ளது. இது மேலும் வலுப்பெற்று அதிதீவிர புயலாக மாறி இந்திய தரை பகுதியில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இந்த புயலால் கோவாவுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த 24 மணிநேரத்திற்கு மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

0 Comments

Write A Comment